நிவர் புயலை எதிர்கொள்ள மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1077

நிவர் புயல் தொடர்பாக பல்வேறு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, முகாம்கள் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் மருத்துவ கலந்தாய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலின் போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது என்றார்.

நிவர் புயலின் போதும் இதே போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். நாளை முதல் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்பதால், தனியார் கல்லூரிகள், மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க கூடாது என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments