கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறி விட்டதாக குஜராத், டெல்லி அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

0 1560
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறி விட்டதாக குஜராத், டெல்லி அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறி விட்டதாக குஜராத், டெல்லி அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, கொரோனா தொற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மத்திய அரசிடம் இருந்து என்ன உதவி தேவை என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 2 நாட்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியாவில் டிசம்பர் மாதம் கொரோனா தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments