தமிழகத்தில் 25ஆம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி

வரும் புதன்கிழமை முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வரும் புதன்கிழமை முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அரங்க நிகழ்ச்சிகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும், அதிகப்பட்சமாக 200 பேர் பங்கேற்கலாம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறந்தவெளி கலாச்சார நிகழ்ச்சிகளில் அதிகப்பட்சம் 200 பேர் வரை பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தச் சென்னையில் மாநகரக் காவல் ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Comments