காவலர்களுக்கு வார விடுமுறை... தமிழ்நாடு அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

காவலர்களுக்கு வார விடுமுறை... தமிழ்நாடு அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு
சென்னை நீங்கலாக, மாநிலத்தின் அனைத்து காவல்நிலையங்களிலும் பணியாற்றும் போலீசாருக்கு, வார விடுமுறை வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் முடிவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிற அரசு ஊழியர்களைப் போல் காவல் துறையினருக்கும் சுழற்சி முறையில் ஓய்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறிப்பிட்ட நேர வரையறையின்றி கடமையைச் செய்யும் காவல்துறையினருக்கு ஓய்வு எடுக்கும் உரிமை உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2020
(2/2)
Comments