லவ் ஜிகாத் விமர்சனம் ஐ.ஏ.எஸ். தம்பதியர் திடீர் விவாகரத்து..! குடும்பத்தில் கும்மியடித்த முகநூல்

0 51464

2015 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்ததோடு 3 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல ஐ.ஏ.எஸ் தம்பதியர், விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு லவ் ஜிகாத் விமர்சனத்தை மீறி இணைந்த கைகள், பிரிந்த கைகளான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

டினா டபி - அதர் கான் பெயர்களை கேட்டவுடன் தெரிந்திருக்கும் இவர்கள் மதங்களை கடந்து மனதால் இணைந்த காதல் ஜோடி என்று..!

2015 ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.சி தேர்வில் பட்டியலினத்தை சேர்ந்த டினா டபி முதல் இடத்தையும் அதர்கான் 2 வது இடத்தையும் பிடித்து வெற்று பெற்றனர். காஷ்மீரை சேர்ந்த அதர் கானும், ஜெய்ப்பூரை சேர்ந்த டினாடபியும் முசொரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மையத்தில் தங்கி பயிற்சி எடுத்த போது ஒன்றாக ஆடிய மேடை நடனத்தில் ஒர்க் ஆன கெமிஸ்ட்ரியால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

3 ஆண்டுகளாக பலரது கண்களை உறுத்திய காதல் ஜோடி என்று கூட சொல்லலாம் அந்த அளவிற்கு சமூக வலைதலங்களில் இருவரும் தங்களது டேட்டிங் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து பல சிங்கிள்களையும் காதலிக்க தூண்டினர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, சுமித்ரா மகாஜான் உள்ளிட்ட பிரபலங்களின் ஆசீர்வாதத்தோடு விமர்சையாக நடந்தது இந்த காதல் ஜோடிகளின் மதங்களை கடந்து மனதால் இணைந்த திருமணம்..!

இதனை லவ் ஜிகாத் என்று இந்துமகாசபா தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். விமர்சனங்களை கடந்து வாழ்த்துக்கள் குவிந்ததால் இனிமையாக வாழ்க்கையை தொடங்கிய இந்த தம்பதிகளுக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரிலேயே பணியிடமும் வழங்கப்பட்டது.

பணியில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த டினா டபிகான் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றியதால் அவர் பணிபுரிந்த பில்வாரா மாவட்டம் முன்மாதிரியானதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அதர்கானும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிவந்தார். மேலும் டினா டபிக்கு பலர் முகநூல் போலியான கணக்குகளில் ஆரம்பித்த ஆர்மி குடும்பவாழ்வில் குண்டு போட்டது.

கணவன் மனைவிக்கிடையேயான ஒப்பீடும் அவர்களுக்குள் மனக்கசப்பை உருவாக்கியுள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தனது பெயரில் இயங்கி வரும் போலி முகநூல் கணக்குகளை முடக்க கோரி டினா டபி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் சில தினங்களில் தனது முகநூல் கணக்கில் பெயருக்கு பின்னால் இருந்த கான் என்ற பெயரை நீக்கிவிட்டு பழைய படி, டினாடபி என்று போட்டுக் கொண்டார். இதற்கு பதிலடியாக இன்ஸ்டாகிராமில் டினாடபியை அன் பாலோ செய்தார் கணவர் அதர்கான். இதனால் இருவருக்குள்ளேயும் மோதல் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

சாதி மற்றும் மத மறுப்பு திருமணத்துக்கு அடையாளமாக சொல்லப்பட்ட இந்த ஐ.ஏ.எஸ் தம்பதியர் எடுத்துள்ள விவாகரத்து முடிவுக்கு அவர்கள் கட்டுபாடற்ற முறையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட புகைபடங்களே காரணம் என்று சொல்லப்பட்டாலும் , இருவருக்குமிடையே உள்ள கருத்து வேறுபாடுகளே சமூக வலைதளங்கள் மூலம் பிரதிபலித்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

முகநூலும், இன்ஸ்டாகிராமும் ஐ.ஏ.எஸ் காதல் தம்பதியர் வாழ்க்கையிலும் சடுகுடு விளையாடி இருப்பதன் மூலம், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் தம்பதிகள் சற்று கவனமாக கையாள வேண்டும் இல்லையேல் விவாகரத்து வரை இழுத்துச் சென்று விடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாக மாறி இருக்கின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments