தமிழகத்தில் இன்று 1707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..19 பேர் பலி..!

0 2447
தமிழகத்தில் இன்று 1707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, கணிசமாக குறைந்து, ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 251 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக ஆயிரத்து 707 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில், புதிதாக 471 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோயம்புத்தூரில் 149 , செங்கல்பட்டில் 119 பேர், கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். தமிழகம் முழுவதும் 5 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments