தமிழகத்தில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

0 988
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் ஓடும் வற்றாத நதியான தாமிரபரணி இப்போது வெள்ளப்பெருக்குடன் பாய்கிறது. அந்த ஆறு பாயும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி, மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டத்தை செழிக்க செய்யும் வைகை ஆறும் இப்போது வெள்ளப்பெருக்கை கண்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மூல வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழகத்தின் ஒரே பெரும் நதியான காவிரியிலும் வெள்ளம் சுழித்தோடுகிறது.

காவிரியில் வினாடிக்கு 10,000 கன அடி வீதமாக இருந்து நீர்வரத்து 12,000 கன அடி வீதமாக உயர்ந்துள்ளது.வடதமிழகத்தை ஊடறுத்து பாயும் பாலாறு, இப்போது தண்ணீர் பெருக்கை பார்த்துள்ளது. அந்த ஆற்றிலும் கரைபுரளும் தண்ணீர் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments