புனேயில் ரசிகர்கள் வராததால் செலவுகளை சமாளிக்க முடியாமல் ஒற்றைத் திரையரங்குகள் மூடல்

0 974
புனேயில் ரசிகர்கள் வராததால் செலவுகளை சமாளிக்க முடியாமல் ஒற்றைத் திரையரங்குகள் மூடப்பட்டன

திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள போதும் கொரோனா அச்சத்தால் மக்கள் திரையரங்குகளுக்கு வராமல் பல திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் புதிய படங்கள் வராததும் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் புனேயில் பல நூறு இருக்கைகள் கொண்ட ஒற்றைத் திரையரங்குகள் யாவும் மூடப்பட்டுள்ளன.

அவற்றை திறப்பதற்கும் பராமரிப்பதற்கும் வசதி இல்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மல்டிபிளக்சுகளில் உள்ள திரையரங்கங்களிலும் போதிய அளவு ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments