தாய்லாந்தில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்: 18 பேர் காயம்

0 450
தாய்லாந்தில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்: 18 பேர் காயம்

தாய்லாந்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் காயமடைந்தனர்.

பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும், மன்னரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டும் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று தலைநகர் பாங்காங்கில் நாடாளுமன்றத்தை நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து கண்ணீர் புகை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டினர். இந்த நிகழ்வில் 18 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments