நடிகை கவுதமி வீட்டுக்குள் குடிபோதையில் சுவர் ஏறி குதித்த நபர் கைது

0 12635
நடிகை கவுதமி வீட்டுக்குள் குடிபோதையில் சுவர் ஏறி குதித்த நபர் கைது

நடிகை கவுதமியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில்  நடிகை கவுதமியின் வீடு உள்ளது. அந்த வீட்டு வளாகத்துக்குள் நேற்றிரவு திடீரென சுவர் ஏறி குதித்து இளைஞர் ஒருவர் புகுந்தார்.

தகவலின்பேரில் நீலாங்கரை போலீசார் வந்து அவரை விரட்டி பிடித்தனர். முதல்கட்ட விசாரணையில், இளைஞரின் பெயர் பாண்டியன் என்பதும், பெயிண்டராக வேலை பார்ப்பதும் குடிபோதையில் சுவர் ஏறிக் குதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments