அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் 130 பேருக்கு கொரோனா தொற்று

0 1014

திபரர் டிரம்ப், புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் வெள்ளை மாளிகைக்கு பாதுகாப்பு அளிக்கும் அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலை ஒட்டி நடந்த பல பிரச்சாரக் கூட்டங்களில், மக்கள் முகக்கவசம் இன்றி கலந்து கொண்டனர். அங்கெல்லாம் பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபட்டதே இந்த அளவுக்கு தொற்று பரவ காரணம் என கூறப்படுகிறது.

அதே போன்று கடந்த 3 வாரங்களாக வெள்ளை மாளிகையில் டிரம்ப் தலைமையில் நடந்த பல நிகழ்ச்சிகளிலும், கடந்த 3 ஆம் தேதி டிரம்ப் அளித்த இரவு விருந்திலும் பலர் முகக்கவசம் இன்றி பங்கேற்றதும் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. தொற்று உறுதியானதை தொடர்ந்து சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் குவாரன்டைனில் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments