'காலை 9 மணிக்கு பணிக்கு வந்தால் 7 மணி வரை அமரவே முடியாது'- போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

0 36213
'காலை 9 மணிக்கு பணிக்கு வந்தால் 7 மணி வரை அமரவே முடியாது'- போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

திண்டிவனம் சப் ஜெயிலில் காவலர் ஒருவர் பணிச்சுமையால் கையை பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் நல்லியக்கோடன் நகரை சேர்ந்த பாரதி மணிகண்டன் என்பவர் திண்டிவனம் சப் ஜெயிலில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை ஜெயிலில் நின்றவாறே பணிபுரிதுள்ளார். திடீரென இரவு பிளேடால் இடது கை மணிக்கட்டில் கிழித்து கொண்டதை கண்ட பிற காவலர்கள் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். விசாரணையில் காலை 9 மணிக்கு பணிக்கு வந்தால் இரவு 7 மணி வரை நின்று கொண்டே பணி செய்ய வேண்டும் என சப்ஜெயிலரின் உத்தரவால் இப்படி நடந்து கொண்டதாக பாரதி மணிகண்டன் கூறியுள்ளார். பணி செய்யும் போது சற்று நேரம் கூட அமர விட மாட்டார்கள். இதனால், அதிக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

உயர் அதிகாரிகள் கடை  நிலை காவலர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டுமென்று உயர் அதிகாரிகள் பல முறை அறிவுறுத்தியும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments