பீகாரில் தேர்வான எம்.எல்.ஏ.க்களில் 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தகவல்

0 1523

பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தேர்வான எம்.எல்.ஏ.க்களில் 163 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதும், அதில் 123 பேர் கொலை, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொள்வதும்  ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த சட்டமன்றத்தை ஒப்பிடும்போது இது 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் பணக்கார எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் 123ல் இருந்து 194 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments