108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் முதலமைச்சர்

0 1379
108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் முதலமைச்சர்

அவசரக் கால மருத்துவ ஊர்தி சேவைக்காக 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

நடப்பு ஆண்டில் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 அவசரக் கால ஊர்திகள் வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

முதற்கட்டமாக 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 90 ஆம்புலன்ஸ்களை ஆகஸ்டு மாதத்தில் முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.

இரண்டாம் கட்டமாக 24 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 108 ஆம்புலன்ஸ்களை இன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments