சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

0 1089
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சித்திரைத் திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுமென திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும், இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், மண்டல மகர விளக்கு காலத்தையொட்டி சபரிமலை கோவில் நடை 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments