கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பெருமை தன்னை சேரக்கூடாது என தாமதமாக அறிவிப்பு - ட்ரம்ப் குற்றச்சாட்டு

0 2765
கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பெருமை தன்னை சேரக்கூடாது என தாமதமாக அறிவிப்பு - ட்ரம்ப் குற்றச்சாட்டு

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்ததற்கான பெருமை தன்னை வந்து சேரக்கூடாது என்பதற்காக, தடுப்பூசி வெற்றி குறித்த அறிவிப்பு தேர்தலுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஃபைசர் என்ற நிறுவனம் தங்களின் தடுப்பூசி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இன்று காலை அறிவித்தது. 

தனக்கு வரும் புகழை தடுக்கும் வகையில், ஃபைசர், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் காலதாமதமாக தடுப்பூசி வெற்றி குறித்த தகவலை அறிவித்துள்ளதாக குற்றஞ்சாட்டி ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments