அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் சவால்!

0 2533
அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் சவால்!

அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரும், பயோஎன்டெக்கும் சேர்ந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி  வெற்றிகரமான பலன்களை அளித்தாலும், அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவை தடுப்பதில் இந்த தடுப்பூசி 90 சதவிகிதம் திறன் படைத்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழே வைத்து தான் பயன்படுத்த முடியும் என அதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெப்ப நிலையில் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறனை இந்த தடுப்பூசி உருவாக்கும். 

மிகவும் நவீனமான அமெரிக்க மருத்துவமனைகளிலேயே இதை பயன்படுத்துவது சவாலான செயல் என்பதால், வளரும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ள சாதாரண மக்களுக்கு இதனால் பயன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments