மருத்துவ படிப்புகளில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர்? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 967

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர்? என்பது குறித்த விவரத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த பெண் ஒருவர், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்று விசாரணையை 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments