அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் துவக்கம்

0 1808
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் துவக்கம்

அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பைடன் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.

அதிபராவதற்கான பெரும்பான்மை தேர்தல் வாக்குகளை ஜோ பிடன் பெற்றுள்ள நிலையில், வரும் 14 ம் தேதி தேர்வுக் குழுவினர் கூடி அவரை புதிய அதிபராக அறிவிப்பார்கள்.

அதன்பின்னர் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி ஜோ பிடன் முறைப்படி அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. சட்டரீதியாக சில நடவடிக்கைகளும் முதலில் மேற்கொள்ளப்படும். 

ஜோபைடன் பதவி ஏற்பதற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அந்த பணிகளும் தொடங்கப்பட்டு இருக்கின்றன. ஜோ பைடனுக்கு ஏற்ற வகையில் மாளிகை அறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்.

பதவி ஏற்பு விழாவுக்கு யார்- யாரை அழைப்பது? எந்த மாதிரி விழாவை நடத்துவது? என்பது குறித்து அலுவல் ரீதியாக திட்டங்களை வகுத்து வருகிறார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments