இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யபட்ட தமிழக விசைப்படகுகள் அழிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் அனுமதி

0 1298
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யபட்ட தமிழக விசைப்படகுகள் அழிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் அனுமதி

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான 121 தமிழக விசைப்படகுகளை அழிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2015 முதல் 2018 வரை இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 94 விசைப்படகுகளின் வழக்கு ஊர்காவல்துறை மாவட்ட நீதிமன்றத்திலும் 37 படகுகளின் வழக்குகள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தன.

விசைப்படகுகள் அனைத்தையும் விடுவிக்க 2018 ஆம் ஆண்டு நீதிமன்றங்கள் அனுமதி அளித்த நிலையிலும், 10 படகுகளை மட்டும் தமிழக மீனவர்கள் மீட்டுச் சென்றனர்.

கைவிடப்பட்ட 121 விசைப்படகுகள் கடற்கரையோரம் நீண்ட காலமாக நின்று பல பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அழிப்பதற்கோ அல்லது ஏலத்தில் விடுவதற்கோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments