அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி..!

0 6070
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் 290 வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், 4 நாட்களாக முடிவுகளில் இழுபறி நீடித்து வந்தது. குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த தேர்தல் போர் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது.

வெற்றி பெறுவதற்கு 270 வாக்குகள் தேவை என்ற சூழலில், பென்சில்வேனியா மற்றும் நைவேடாவில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு 290 வாக்குகளுடன் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன், அதிகபட்ச வாக்குகளைப் பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் டிரம்ப் 214 இடங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளார். இனி அவருக்கு இந்த வெற்றியை மறுக்கும் வாய்ப்புகள் இருக்காது.

கடந்த 30 ஆண்டுகளில், அதிபராக இருந்த ஒருவர், பதவியிலிருக்கும் போதே, தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும்.

அதே நேரம் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ், வெற்றி பெற்றதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகியுள்ளது அமெரிக்க வாழ் இந்தியர்களையும், தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தனது டுவிட்டர் பதிவில், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நாட்டை வழிநடத்த தம்மைத் தேர்ந்தெடுத்ததற்கு பெருமைப்படுவதாகவும் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் அதிபராக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments