தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2975
தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 341 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2 ஆயிரத்து 352 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.  மேலும் 25 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 101 வயது முதியவர்,கொரோனாவுக்கு பலி ஆனார். சென்னையில் 603 பேருக்கும், கோவையில் 213 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments