ஜெனிவாவில் ரூ.281 கோடிக்கு ஏலம் போகும் இளஞ்சிவப்பு நிறத்திலான அரிய வைரம்

0 661
ஜெனிவாவில் ரூ.281 கோடிக்கு ஏலம் போகும் இளஞ்சிவப்பு நிறத்திலான அரிய வைரம்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இளஞ்சிவப்பு நிறத்திலான அரிய வைரம் ஒன்று 281 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வைரம் ரஷ்யாவில் உள்ள சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டதாகும். 'The Spirit of the Rose' என்று பெயர் கொண்ட இந்த அரிய வைரம் 14.83 காரட் மற்றும் ரஷ்யாவில் இதுவரை கண்டிராத இளஞ்சிவப்பு படிமத்தில் வெட்டப்பட்டதாகும்.

இயற்கையாகவே வைரங்கள் பல வண்ணங்களில் கிடைத்தாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்த வைரம் வருகிற 11ந்தேதி ஜெனிவாவில் உள்ள ஏல மையத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments