7.5 சதவீத உள்ஒதுக்கீடு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெற நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

0 864
7.5 சதவீத உள்ஒதுக்கீடு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெற நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளும் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறும் வகையில் நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறி, நெல்லையைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவர் சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு முறையீடு செய்யப்பட்டது.

அரசுப்பள்ளிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கும் பெரும் வேறுபாடு இல்லை என்பதால், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இந்த முறையீட்டை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments