வாடிக்கயாளர் தகவல்கள் கூகுள், ஃபேஸ்புக்குடன் பங்கிடப்படாது-ரிலையன்ஸ் நிறுவனம்

0 1275
தங்களது வாடிக்கையாளர்கள் குறித்த எந்த தகவல்கள், விபரங்கள், ஃபேஸ்புக் அல்லது கூகுள் நிறுவனங்களுடன் பங்கிடப்படாது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களது வாடிக்கையாளர்கள் குறித்த எந்த தகவல்கள், விபரங்கள், ஃபேஸ்புக் அல்லது கூகுள் நிறுவனங்களுடன் பங்கிடப்படாது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற குழுவில் ஆஜரான ரிலையன்ஸ் அதிகாரிகள் இந்த உறுதியை அளித்துள்ளனர். ரிலையன்சின் ஜியோ பிளாட்பார்ம்  மற்றும்  ஜியோ இன்போகாமில் கூகுளும், ஃபேஸ்புக்கும் முதலீடு செய்துள்ளன.

இதனால் இந்தியர்களின் தகவல்கள் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் இந்த உறுதியை அளித்துள்ளது.

வாடிக்கையாளர் தகவல்களை கூகுள், பேஸ்புக்குடன் பங்கிடுவதற்கான எந்த அமைப்புமுறையும் தங்களிடம் இல்லை என ரிலையன்ஸ் தெரிவித்து விட்டதாக நாடாளுமன்ற குழுவின் தலைவரும் பாஜக எம்பியுமான மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments