குஜராத்தில் ரசாயன கிடங்கில் பயங்கர வெடி விபத்து-5 பெண்கள் உட்பட 12 பேர் பலி

குஜராத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெண்கள் உட்பட 12 பேர் பலியாகினர்.
குஜராத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெண்கள் உட்பட 12 பேர் பலியாகினர்.
அகமதாபாத்தில் ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த ஜவுளி கிடங்கு கட்டடம் இடிந்து விழுந்து தீ பிடித்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து சுமார் 9 மணி நேரமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலியான 12 பேரின் உடல்களை மீட்ட தீயணைப்புத்துறையினர், காயமடைந்த 9 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Comments