காஞ்சிபுரம் : மனைவியோடு தொடர்பு வைத்திருந்தாக 19 வயது இளைஞன் கொன்று புதைப்பு - கணவன் சரண்

0 55194
காஞ்சிபுரம் : மனைவியோடு தொடர்பு வைத்திருந்தாக 19 வயது இளைஞன் கொன்று புதைப்பு - கணவன் சரண்

காஞ்சிபுரம் அருகே மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த 19 வயது இளைஞனை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

காரை பகுதியைச் சேர்ந்த தினேஷ், ரவிச்சந்திரன் என்பவரின் மனைவியோடு தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து எச்சரித்தும் கேட்காத நிலையில், தினேஷை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்று, சடலத்தை மோட்டூர் ஏரிக்கரையோரம் ஜே.சி.பி உதவியுடன் 10 அடி ஆழ பள்ளம் தோண்டி புதைத்ததாக, ரவிச்சந்திரன் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தான்.

பிணத்தை மீட்ட போலீசார், ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments