ஹெரிடேஜ் குழும ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

0 3565

சென்னை, மதுரையில் இருக்கும் ஹெரிடேஜ் குழும ஓட்டல்கள், அதன் உரிமையாளருக்கு சொந்தமான 9 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரையடுத்து சென்னையில் பல்லாவரம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓட்டல்கள், அலுவலகங்களிலும், மதுரை கோச்சடையில் இருக்கும் ஓட்டல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை கோச்சடையில் இருக்கும் ஓட்டலில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெறுகிறது.

அங்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் என்பதால், சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி அங்கு வருவோரை அனுமதிக்கின்றனர். அண்மையில் கல்வி நிறுவனங்களில் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments