திருவிழா காலங்களில் உள்ளூர் தயாரிப்பு பொருள்களை வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

0 1024

தீபாவளி உள்ளிட்ட திருவிழா நாள்களில்  உள்ளூர் தயாரிப்பு பொருட்களை மக்கள் வாங்க வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பீகார் மாநிலம் சகார்சாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 25 ஆண்டுகளில் விற்பனையான காதி பொருள்களை காட்டிலும் கடந்த 5 ஆண்டுகளில் அதிக காதி பொருள்கள்  விற்பனையாகி இருப்பதாகவும், தில்லியில் காதி விற்பனையகம் ஒன்றில் 2 வாரத்துக்கு முன்பு ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாகவும் கூறினார்.

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியை காட்டாட்சி கூட்டணி  என்றும், அக்கூட்டணி பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுவதை பிரச்னையாக நினைக்கிறது என்றும் மோடி விமர்சித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments