அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு: டிரம்ப்- ஜோ பைடன் இடையே கடும் போட்டி

0 1835
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு: டிரம்ப்- ஜோ பைடன் இடையே கடும் போட்டி

அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் ட்ரம்புக்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்திய நேரப்படி, பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர், வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்பார்.

முன்னணி பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களான பென்சில்வேனியா, விஸ்கான்சின், புளோரிடா, அரிசோனா ஆகியவற்றில் ஜோ பைடனுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

தேர்தல் தினம் இன்று தான் என்றாலும் பல மாகாணங்களில் ஏற்கனவே, வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். முன்கூட்டியே வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் பைடனை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியினர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நேரடி வாக்குப்பதிவில் ட்ரம்புக்கு அதிக ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேசமயம், நீண்ட நாளுக்கு வாக்களிக்க அனுமதிப்பதன் மூலம் தேர்தலில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பாக சட்டரீதியாக அணுக உள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments