உத்தரப்பிரதேசத்தில் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக, காங். மாவட்டச் செயலாளரை அடித்து உதைத்த பெண்கள்

0 2858
உத்தரப்பிரதேசத்தில் ரயில் நிலையம் அருகே காங். மாவட்டச் செயலாளருக்கு செருப்படி: பாலியல் புகார் அளித்த இரண்டு பெண்களின் துணிகரம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் பகுதியின் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அனுஜ் மிஸ்ரா மீது பாலியல் புகார் அளித்த இரண்டு பெண்கள் திடீரென அவர் சட்டையைப் பிடித்து இழுத்து செருப்பால் அடித்து உதைத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இதில் அவர் சட்டை கிழிந்தது.

பல நாட்களாக அனுஜ் மிஸ்ரா தங்கள் இருவருக்கும் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் அதுகுறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படததால் தாங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண்கள் தெரிவித்தனர். ஆனால் தம் மீதான புகார்களை அனுஜ் மிஸ்ரா மறுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments