லவ் ஜிகாத்துக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் - ஹரியானா உள்துறை அமைச்சர்

0 3070
லவ் ஜிகாத்துக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் - ஹரியானா உள்துறை அமைச்சர்

லவ் ஜிகாத்துக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என ஹரியானா அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பல்லப்கர் என்ற இடத்தில் கல்லூரி மாணவி நிகிதா தோமர் என்பவர் அவருடன் படித்த தவ்ஸீப் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிகழ்வு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்று காதலிப்பதாகக் கூறியும், மதம் மாறினால் மட்டுமே திருமணம் என்று இளம்பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments