இந்திய - சீன உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

0 2287
இந்திய - சீன உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா-சீனா உறவுகள் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி உரை நிகழ்த்திய அவர், கடந்த 30 ஆண்டுகளாக சீனாவுடன் இந்தியாவின் நட்புறவு நீடித்து வந்ததையும், எல்லையில் வெளிப்படைத்தன்மையுடன் இருதரப்பினரும் நடந்து கொண்டதால் அமைதி நீடித்து வந்தததையும் சுட்டிக்காட்டினார்.

அசல் எல்லைக் கோடு பகுதியை மாற்றியமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். படைகள் முன்பு எந்தெந்த நிலைப்பாடுகளில் குவிக்கப்பட்டனவோ அங்கேதான் இருக்க வேண்டும் என்றும்  ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments