மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 5 தென்மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 5742
மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 5 தென்மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 5 தென்மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ள வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments