பிரசவத்தின்போது தாய் - சேய் உயிரிழப்பு..! ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையே காரணமென குற்றச்சாட்டு

0 3950
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பிரசவத்தின்போது தாய் -சேய் இறந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பிரசவத்தின்போது தாய் -சேய் இறந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அயல்துரையின் மனைவி கற்பகத்துக்கு நேற்று இரவு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்து இறந்துள்ளது. கற்பகத்துக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்படவே, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது.

எனினும் அவர் உயிரிழந்தார். 2 உயிரிழப்புக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல், செவிலியர்கள் வயிற்றை கடுமையாக அழுத்தி சிகிச்சை அளித்த காரணமென குற்றம்சாட்டி உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments