அலாவுதீன் அற்புத விளக்கு என சாதாரண விளக்கை மருத்துவரிடம் 31 லட்சம் ரூபாய்க்கு விற்று மோசடி...2 பேர் கைது

0 4403
அலாவுதீன் அற்புத விளக்கு என சாதாரண விளக்கை மருத்துவரிடம் 31 லட்சம் ரூபாய்க்கு விற்று மோசடி...2 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் அலாவுதீன் அற்புத விளக்கு என்று தெரிவித்து மருத்துவரிடம் சாதாரண விளக்கை 31 லட்சம் ரூபாய்க்கு விற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கமலஹாசன் நடிப்பில் வெளியான அலாவுதீன் அற்புத விளக்கு படத்தில் விளக்கை தேய்க்கையில் பூதம் வெளிவந்து, கேட்டதை தந்து உதவி செய்யும் காட்சிகள் இருக்கும்.

இந்த விளக்கு தங்களிடம் இருப்பதாக மருத்துவர் எல்ஏ கான் என்பவரிடம் பெண் உள்ளிட்ட 3 பேர் தெரிவித்துள்ளனர். பூதத்தை வெளிவர செய்வது போல தாங்களே அதுபோல உடை அணிந்து வந்துள்ளனர்.

இதை நம்பி விளக்கை வாங்கிய மருத்துவர் எல்ஏ கான், அது பொய் என்பது தெரிந்ததால், போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரித்து 2 பேரை கைது செய்த போலீசார், பெண்ணை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments