தமிழகத்தில் இன்று 2608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2649
தமிழகத்தில் இன்று 2608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பின், ஒருநாள் மொத்த எண்ணிக்கை, ஒரு வார காலமாக, 3 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. 

புதிதாக 2,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில், 3 ஆயிரத்து 924 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 38 பேர் உயிரிழந்தனர். 

சென்னையில், கொரோனா கணிசமாக குறைந்துவரும் நிலையில், புதிதாக 723 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 228 பேருக்கும், செங்கல்பட்டில் 158 பேருக்கும், திருவள்ளூரில் 149 பேருக்கும், திருப்பூரில் 145 பேருக்கும், ஈரோட்டில் 115 பேருக்கும், பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments