திருச்சி : குழந்தைகளை மறந்த இளம் பெண்... காதலனுடன்தான் வாழ்வேன் என அடம்!- பரிதவிப்பில் கணவர்

0 46202

திருச்சியில் குழந்தைகளை மறந்து காதலனுடன்தான் வாழ்வேன் என்று அடம் பிடிக்கும் இளம் பெண்ணால் அவரின் கணவர் தவித்து வருகிறார்.

திருச்சி மாவட்டம் எடமலைபட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 44). இவருக்கும் ஆஷா மெர்சி என்பவருக்கும் கடந்த 2013 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும் ஹரிஷ் சுதர்சனன் என்ற மகனும் உள்ளனர்.  திருச்சியில் தனியார் மருத்துவமனையில் ஆஷா மெர்சி பணியாற்றி வருகிறார்.குமரவேல் இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே , பீம் நகரைச் சேர்ந்த செல்வகணபதி என்ற காவல் உதவி ஆய்வாளர் விபத்து ஏற்பட்டதில் ஆஷா மெர்சி வேலை பார்த்து வந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரின் மகன் அபிஷேக் குமார் (வயது 25) தந்தையை காண அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது,   அபிஷேக் குமாருக்கும் ஆஷா மெர்சிக்குமிடையே நட்பு ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். அபிஷேக்குமாரும் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் குறித்து குமரவேலுக்கு எந்த தகவலும் தெரியாது.இந்த சூழலில் கடந்த 2 -ஆம் தேதி ஆஷா மெர்ஷி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை இதுகுறித்து குமரவேல் எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில்அபிஷேக் குமாரை ஆஷா மெர்சி திருமணம் செய்து கொண்டது உறுதியானது. முதல் கணவர் குமரவேல் உயிருடன் இருக்க சட்டப்படி விவாகரத்து பெறாமல் அபிஷேக்கை மெர்சி திருமணம் செய்துள்ளார்.அதேபோல அபிஷேக் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாத நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது ஆஷா மெர்சி அபிஷேக்குடன் வசித்து வருகிறார். ஆஷா மெர்சியின் குழந்தைகள் தாயை காண முடியாமல் கதறி துடிக்கின்றனர்.இதுகுறித்து குமரவேல் கூறுகையில் "அபிஷேக் காவல்துறை அதிகாரியின் மகன் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்காமல் என்னை மிரட்டுகின்றனர். உன் மனைவிக்கு உன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும் அவனோடு தான் வாழ்வேன் என்று கூறுவதாக போலீசார் என்னிடத்தில் தெரிவித்தனர். என்னுடைய குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக ஆஷா மெர்சியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்'' என்று கண்ணீர் விடுகிறார். 

ஆனால் ஆஷா மெர்சியோ மனம் இறங்குவதாக தெரியவில்லை. ஆஷா மெர்சி கூறுகையில் " எனக்கும் குமரவேலு க்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது. வயதை மறைத்து அவர் என்னை திருமணம் செய்துகொண்டார்.இனி குமரவேலுடன் வாழ தயாராக இல்லை. அபிஷேக்குடன் தான் வாழ்வேன். குழந்தைகளை என்னிடம் அவர் ஒப்படைக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்தை நாடி உரிய தீர்வு பெறுவேன் என்று கூறுகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments