கட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமானப் பணியாளர்களே இடித்துள்ளனர் - அமைச்சர் தங்கமணி

0 13023
கட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமானப் பணியாளர்களே இடித்துள்ளனர் - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 பேர் காயடைந்தாக கூறப்படும் நிலையில், வெல்டிங் விட்டு போன காரணத்தினால் கட்டுமான பணியாளர்களே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இடித்தனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. வடமாநிலத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

60 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று அதிகாலையில் ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி நிறுவனம் தரப்பில் கட்டப்படும் மருத்துவமனையின் முற்பகுதியின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திடீர் விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு கட்டுமான பணியில் ஈடுப்பட்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தனர்.

கட்டிட பணிகளை ஆய்வு செய்த பின் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கட்டுமானப் பணியின்போது விபத்து ஏற்படவில்லை என்றும், வெல்டிங் விட்டு போன காரணத்தினால் கட்டுமான பணியாளர்களே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இடித்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.

ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தியின் நாமக்கல்லில் உள்ள இல்லத்திலும், அலுவலகத்திலும் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments