கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா

0 2025
கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா

கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை மீண்டும் பரிசோதனை நடத்தியுள்ளது.

லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், இந்தியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. அரபிக் கடல்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஎன்எஸ் பிரபால் எனும் போர் கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தி, பழைய கப்பல் ஒன்றை தாக்கி மூழ்கடித்து கடற்படை சோதனை நடத்தியிருந்தது.

இந்நிலையில் வங்காள விரிகுடா கடலில் ஐஎன்எஸ் கோரா எனும் போர் கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தி கப்பலை தாக்கி இந்திய கடற்படை சோதனை நடத்தியுள்ளது.

இந்த படங்களை பகிர்ந்துள்ள கடற்படை, அந்த ஏவுகணை மிகவும் துல்லியமாக இலக்கை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments