ஆந்திராவில் டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு

0 657
ஆந்திராவில் டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த டெம்போ வேன் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் தாட்டிகொண்டா மலை மீது அமைந்துள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோயிலுக்கு திருமணத்திற்கு சென்றுவிட்டு, 14 பேர் டெம்போ வேன் ஒன்றில் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, மலைப்பாதையின் பாதி வழியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வேன் 25 அடி ஆழ பள்ளத்துக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மீதமுள்ளவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments