வெளுத்து வாங்கப் போகிறது வடகிழக்கு பருவமழை..!

0 14789
வெளுத்து வாங்கப் போகிறது வடகிழக்கு பருவமழை..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், வடதமிழகம்,தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தீவிரமடைந்துள்ளது என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளதாக கூறிய அவர், மயிலாப்பூரில் 18 செ.மீட்டரும், கிண்டியில் 14 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார்.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments