தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

0 1362
தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு அனுமதி வழங்கிய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தான் காரணமா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுவதற்கு கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியவர்கள் தான் காரணம் என்றனர்.

மேலும், தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை, மாறாக பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாக்கப்படுகின்றனர் என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments