ஃபுளோவா போறதை ஏன் தடுக்கிறீங்க..? கடுப்பான குஷ்பூ!

0 7087

டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக செல்ல முயன்றபோது, பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூவை, சென்னையை அடுத்த ஈசிஆர் முட்டுக்காட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்  வைக்கப்பட்டுள்ள ரிசார்ட் முன்பு திரண்ட பாஜகவினரையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் போலீசார் விரட்டியடித்தனர்

பெண்களை இழிவுபடுத்திவிட்டதாக கூறி திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் பாஜக நடத்த இருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அங்கு தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக, நடிகை குஷ்பூ சென்னையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை வழியாகப் புறப்பட்டுச் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

வலுக்கட்டாயமாக தன்னுடைய பயணம் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அமைதி வழிப் போராட்டத்திற்கு அதிமுக அரசு அனுமதி மறுப்பது ஏன் என்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ கேள்வி எழுப்பியிருந்தார்.

 கைது செய்யப்பட்ட குஷ்பூவை போலீசார், கேளம்பாக்கம்-தையூர் சாலையில் உள்ள சதர்ன் ரெசிடென்சி ரிசார்ட்டில் வைத்துள்ளனர். அங்கேயே தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பூ, திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அண்ணன் திருமாவளவனுக்கு இனி மரியாதை இல்லை என அவர் பேசிக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பெண் குறுக்கிட்டபோது, ஏம்மா ஃபுளோவாக போய்க் கொண்டிருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா என குஷ்பூ கடுப்பானார். பிறகு சினிமா படப்பிடிப்பில் மீண்டும் ரீடேக் எடுப்பது போன்று, முதலில் இருந்து சொல்லத் தொடங்கினார்.

இதனிடையே, ரிசார்ட் முன்பு திரண்ட பாஜகவினர் தங்களையும் கைது செய்யுமாறு கோஷமிட்டனர். அதேசமயத்தில் அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் கட்சிக் கொடிகளுடன் திரண்டதால் பரபரப்பும் பதற்றமும் உருவானது. இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் விரட்டியடித்தனர்.

அப்பகுதியில் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments