ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியினர் 14 நாள்கள் தனிமைப் படுத்தப்படுவர் - பிசிசிஐ தலைவர் கங்குலி

0 8312

ஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாட  செல்லும் விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் அங்கு 14 நாள்கள் தனிமைபடுத்தப்படுவர் என்று பிசிசிஐ  தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தற்போது இந்திய அணியினர்  விளையாடுகின்றனர்.  இந்நிலையில் கங்குலி அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி அடுத்த மாதம் பயணிக்கவுள்ளதாகவும், ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் தங்கியிருக்கையில் வெளிநபர்களோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்து இருக்க வலுவான ஏற்பாடுகளை செய்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

  இந்திய அணியினருடன் குடும்பத்தினர் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கங்குலி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments