இன்று உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹாரம்.. கொரோனா அச்சுறுத்தலால் முதன்முறையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை

0 4177
இன்று உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹாரம்.. கொரோனா அச்சுறுத்தலால் முதன்முறையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை

உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், கொரோனா அச்சுறுத்தலால் முதன்முறையாக பக்தர்கள் இன்றி இன்று இரவு நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் தசரா திருவிழாவின் 10-ம் நாளில் கோவில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், வேடமணியும் பக்தர்கள், அவரவர் ஊர்களிலேயே காணிக்கை பெற்று வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், வழக்கமாக ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டியிருக்கும், குலசேகரப்பட்டினம், வெறிச்சோடி காணப்படுகிறது. 1600 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments