சென்னையில் மொத்த விற்பனை நகைக் கடையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை.. கொள்ளையனின் கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரணை

0 5466
சென்னையில் மொத்த விற்பனை நகைக் கடையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை.. கொள்ளையனின் கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரணை

சென்னை தியாகராயநகரில், மொத்த வியாபார நகைக்கடையில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், கொள்ளையனின் காதலியையும், மற்றொரு கொள்ளையனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான மொத்த வியாபார நகைக் கடையில் கடந்த 21-ம் தேதி  இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்றனர். 

செல்போன் தொடர்புகள் மூலம், கொள்ளையர்களில் ஒருவனான கார்த்தியின் காதலியை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளை தனது காதலியிடம் கொடுத்து வைத்துள்ளானா? என  விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கொள்ளையன் சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷை திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரெயில் நிலையம் அருகே பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவனிடமிருந்து 7 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சென்னை போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments