அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி மூலம் சிகிச்சை

0 4837
அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி மூலம் சிகிச்சை

சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முதலமைச்சர் தாயாரின் மறைவை தொடர்ந்து 13ம் தேதி சேலத்துக்கு அமைச்சர் செல்கையில், விழுப்புரத்தில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்கு சென்னை காவிரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனையில் கொரோனா உறுதியாகவே, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் நுரையீரலில் தொற்று அதிக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments