மும்பை சிட்டி சென்டர் மாலில் பிடித்த தீ 56 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது

0 1467
மும்பை சிட்டி சென்டர் மாலில் பிடித்த தீ 56 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது

வியாழக்கிழமை மும்பை சிட்டி சென்டர் மாலில் பிடித்த தீ, சுமார் 56 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்து ஐந்தாம் நிலை தீ விபத்தாக அறிவிக்கப்பட்டு 14 தீயணைப்பு வண்டிகளும், 17 பிரம்மாண்டமான நீர்த் தொட்டிகளும் பயன்படுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார். 

தீயணைக்கும் பணியில் காயமடைந்த 5 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டதும் சிட்டி சென்டர் மாலின்அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 3500 பேர் பாதுகாப்பாக மாற்றப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments