தூத்துக்குடியில் முடி திருத்தும் நிலையம் நடத்தும் பொன்.மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி

0 4013
தூத்துக்குடியில் முடி திருத்தும் நிலையம் நடத்தும் பொன்.மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி

பண்டிகை கால ஷாப்பிங்கின் போது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க  வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் மோடி, பண்டிகைகளை அடக்கத்துடன் கொண்டாடுமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி தமது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரலை இன்று நிகழ்த்தினார். அப்போது, நாட்டு மக்களுக்கு தசாரா வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார். பெரும் கட்டுப்பாடுடன் வாழும் இந்த காலகட்டத்தில், பண்டிகைகளை அடக்கத்துடன் கொண்டாடுவதுடன், வரவுள்ள தீபாவளி போன்ற பண்டிகளிலும் கொரோனா ஜாக்கிரதை உணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தசரா என்பது பொறுமைக்காக கிடைத்த வெற்றி என்ற அவர், நாம் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

பண்டிகை கால ஷாப்பிங்கின் போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை முன்னுரிமை கொடுத்து வாங்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார். எல்லையை காக்கும் வீரர்களை இந்த பண்டிகை காலத்தில் நினைவில் கொள்வோம் என்ற மோடி, நாட்டின் வீரதீர புதல்வர்களான அவர்களுக்காக வீடுகளில் விளக்கேற்றுவோம் என்றார்.

தமது உரையில் மோடி, தூத்துக்குடியில் முடித்திருத்தும் நிலையம் நடத்தும் பொன் மாரியப்பன் என்பவரிடம் பேசினார். பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொன் மாரியப்பனிடம் பேசி வணக்கம் நல்லா இருக்கிறீங்களா? என தமிழில் கேட்டு வியப்பை ஏற்படுத்தினார்.

ஊரடங்கு காலகட்டத்தில் நமது வாழ்க்கையை எந்த சிரமும் இன்றி நடத்த உதவிய தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோருக்கு பண்டிகை காலத்தில் உதவுமாறு மக்களை மோடி கேட்டுக் கொண்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த பென்சில் சிலேட் உற்பத்தியில் 90 சதவிகித தேவையை காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் நிறைவேற்றுவதாக  கூறிய மோடி, நாட்டின் கல்வியில் புல்வாமா முக்கிய பங்கை ஆற்றுவதாக  தெரிவித்தார். இன்று நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களது வீட்டுப்பாடங்களையும், பாடக்குறிப்புகளையும் செய்கிறார்கள் என்றால் அதற்கு புல்வாமா மக்களின் கடின உழைப்பே காரணம் என மோடி பாராட்டு தெரிவித்தார்.

பென்சிலுக்கான மரத் தேவைக்கு ஒரு காலகட்டத்தில் முழுவதுமாக இந்தியா இறக்குமதியை நம்பி இருந்ததாக கூறிய அவர் இப்போது புல்வாமா மக்களின் கடின உழைப்பால், இந்தியா அதில் சுயசார்பை எட்டியுள்ளது என பெருமிதத்துடன் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments